நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்
மகா சிரசு முத்திரை ' சிரசு ' என்ற

வடமொழிச் சொல்லுக்கு தமிழில் ' தலை ' என்று பொருள் . நமது தலைப் பகுதியில் ஏற்படும் அழுத்தங் கள் , சக்தித் தடைகள் , வலிகள் , சைனஸ்களில் ஏற்படும் நீர் கோர்ப்பு ஆகிய அனைத் தையும் இந்த முத்திரை போக்கி விடுவதால் இதை மகா சிரசு முத்திரை என்றழைக்கிறார்கள் . செய்முறை . பெருவிரல் , சுட்டுவிரல் , நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப்பகுதிகளும்ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும்படி இணையுங்கள் அதிக அழுத்தம் தேவை யில்லை தொட்டுக் கொண்டிருந்தால் போதும் அடுத்து மோதிர விரலை மடித்து , உள்ளங்கையிலுள்ள பள்ளத்தில் படுமாறு வைக்கவும் . சுண்டு விரல் மட்டும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.சுவாசம் ஆழமாகவும் சீராகவும் இருப்பது அவசியம் .உங்களது முழு கவனத்தையும் செய்யும் முத்திரையின்மீது பதியுங்கள். அமரும் முறை யோகாசனங்களில் பரிச்சயமுள்ளவர்கள் பத்மாசனத்தில்அமர்ந்து செய்யலாம். பரிச்சயமில்லாதவர்கள் கால்களை மடக்கி சம்மணமிட்ட நிலையில் அமர்ந்து செய்யலாம் . தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம் . கால்களின் பாதங்கள் தரையைத் தொட்டுக் கொண்டிருப்பது அவசியம் . கழுத்தும் முதுகுத் தண்டும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும் . எவ்வளவு நேரம் ? ஒரு முறைக்கு ஆறு நிமிடங்கள் மட்டும் செய்தால் போதுமானது . | ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறை ( காலை , மதியம் , மாலை , இரவு ) செய்யலாம் . * ஒரே நேரத்தில் ஆறு நிமிடங்களுக்கு மேல் செய்ய வேண்டாம் பலன்கள் அனைத்து விதமான தலைவலிகளையும் போக்கும் திறன் இந்த முத்திரைக்கு உண்டு . மன இறுக்கத்தால் வரும் தலைவலிகள், மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஆகியவைகூட இந்த..........

Comments
Post a Comment