நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்
நீங்களும் நெம்பர் ஒன் ' ஆகலாம் 3 . வித்தியாசமானவராய் இருங்கள் ' நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் ? ' என்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் . ' நான் பில்கேட்ஸ் மாதிரி ஆகணும் ' , ' ரஜினிகாந்தைப் போல் நடிகராகணும் ' , ' ஐஸ்வர்யா ராய் போல் பிரபல மாகணும் ' இப்படி பதில் வருமே தவிர ' நான் நானாக இருக்க விரும்புகிறேன் ' என்று பதிலளிப்பவர்கள் அரிது . வாழ்க்கையில் முன்னேற முன் மாதிரிகள் அவசியம் தான் . அவை உந்துதலை அளிப்பவை என்ற அளவோடு நின்றுவிட வேண்டும் . மேற்கொண்டு வெற்றிபெற சுய திறமைதான் உதவும் . இன்னொருவருடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது . நமக்கென்று சுய அடையாளம் இருக்க வேண்டும் . அதைப் பெறுவதற்கு நம்மிடம் உள்ள சிறப்பம்சம் ( பிரத்யே...