நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

 

கார்ல் மார்க்ஸ்           17 . மூலதனத்தின் முதல்பாகம் வெளிவருதலும் மார்க்ஸியம் நிலை பெறுதலும்        மார்க்ஸ் லண்டன் வந்த பிறகுதான் வாழ்க்கையில் அதிக அளவு துன்பமுற்றார் ; ஆம் , கஷ்டம் என்றால் கஷ்டம் , அவ்வளவு பெரிய கஷ்டத்தை அவர் அதற்கு முன்னர் அடைந்ததேயில்லை ; ஆனால் , புயலுக்குப் பின்னர் அமைதி யென்பார்களே , அந்த அமைதியையும் லண்டனில்தான் மார்க்ஸ் பெற்றார் என்று கூறலாம் . லண்டன் வாழ்க்கையின் போதுதான் இவருடைய " மூலதனம் " என்ற நூலின் முதல் பாகம் வெளியானது . மூலதனத்திற்கு மூலாதாரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது - அதாவது பல நூல்களைப் பயின்று குறிப்பெடுத்துக் கொண்டிருந்தபோது மார்க்ஸ் பல துன்பங்களை பட்டு விட்டார் . இல்லாமை மட்டுமன்றி , பசி , பட்டினி , நல்ல உடைகள் இல்லாமை போன்றவைகளிலும் மனைவியின் நோயாலும் , பிள்ளைகளின் உடல் நலக் குறைவாலும் சிரமம் என்றால் அப்படி ஒரு சிரமத்தைப் பட்டார் . அந்த நிலையிலும் தாம் மேற்கொண்ட முயற்சியைக் கைவிடவில்லை . இவர்பட்ட துன்பங்களையும் , அந்த நேரத்திலும் இவர் தன் முயற்சிகளில் குன்றாது உழைத்ததையும் எண்ணும்போது , சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு . குறள் - 587 என்ற குறட்பா தான் நம் நினைவுக்கு வரும் .         அம்புகளால் தாக்கப்பட்டுத் தம்முடம்பில் புண்கள் ஏற்பட்டாலும் , யானையானது தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும் . இதைப் போல ,       ஊக்கமுடையவர்களும் , தாம் கருதிய உயர்வுகளை அடைவதற்குச் சிதைவுகள் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மை என்று எண்ணத் தோன்றுகிறது. வள்ளுவர் பெருமான் குறிப்பிட்டது போன்று தம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு சிதைவுகளைப் பற்றிக் கவலைப்படவே இல்லை . தமது இலட்சியத்திலேயே குறியாக இருந்தார் . அதன் பயனால்தான் மூலதனத்தின் முதல் பாகத்தை இவர் தன்னுடைய வாழ்க்கையிலேயே கொண்டுவர முடிந்தது என்று பெருமையுடன் கூறலாம்.

Comments

Popular posts from this blog

போட்டித் தேர்வு புத்தகங்கள் பாம்பன் கிளை நூலகம்

நாளும் ஒரு புத்தகம்