Posts

Showing posts from December, 2019

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
                                                      

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
 

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
சேரர்கள் வரலாறு     கருவூர் ஏறியஒள்வாள்கோப்பெருஞ்சேரல்இரும்பொறை          ( கி . மு . 300 - 275 ) இந்திய தீபகற்பத்தின் தென்மேற்குமூலையில் , அரபிக் கடலுக்கும் மேற்குமலைத் தொடருக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி சங்க காலத்தில் சேரநாடு எனப்பட்டது . இந்நாட்டை ஆண்டவர்கள் சேரமான் ( சேரர்மகன் ) என்று அழைக்கப்பட்டார்கள் . சேரமான் நாடு அசோகர் கல்வெட்டில் கேரள புத்ர நாடு எனக் குறிப்பிடப்படுகிறது . இன்று அது கேரள மாநிலமாகத் திகழ்கிறது . சேரநாடு சிறப்புற்று விளங்கிய காலத்தில் அதன் வடக்கு எல்லை துளு நாட்டில் ஏழில் மலை வரை பரவி யிருந்தது . கிழக்கு எல்லையை கொங்கு நாடு என்று கொள்ளலாம் . தெற்கிலும் , மேற்கிலும் , கடல் எல்லையாக இருந்தது . ஆன்பொருநை , காஞ்சி வாண என்ற ஆறுகள் சேர நாட்டில் ஓடின . அயிரை மலை , நேரி மலை , ஆனை மலை , கொல்லி மலை என்பன அந்நாட்டின் சிறந்த மலைகள் ஆகும் . ஆன்பொருநை ஆற்றங்கரையில் அமைந்த வஞ்சி சேர நாட்டின் தலைநகரமாகும் . பிற்காலத்தில் வஞ்சி கருவூர் என்று அழைக்கப்பட்டது .