நாளும் ஒரு புத்தகம் வாசிக்கக் கையில் எடுத்துவிட்டால் கீழே வைக்க முடியாது
பாம்பன் கிளை நூலகம்
பொன் விலங்கு தன்னிடம் கேட்டுவிட்டுத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ தமிழைப் பற்றியோ தன்னிடம் அவள் ஒன்றும் கேட்காமல் விட்டிருந்தால் தான் அவன் மிகவும் ஏமாறியிருப்பான் குறுந்தொகை என்னும் சங்கத்தொகை நூலிருந்து அழகிய பாடல் ஒன்றைக் கூறி அதன் பொருளை விளக்கி விவரித்தான் சத்தியமூர்த்தி , " யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ? யானும் நீயும்எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே " முன்பின் பழக்கமில்லாத அழகிய இளைஞன் ஒருவனும் எழிலரசியாகிய பெண்ணொருத்தியும் ஒருமலைச் சாரலில் சந்தித்து மனம் ஒன்றுபடுகிறார்கள் . அவன் அப்படியே தனக்கு முன்னால் தன்னுடனே தான் காணும்படி எப்போதும் நின்றுகொண்டே இருக்க வேண்டும் போல் அவளுக்கு ஆசையாக இருக்கிறது . ஆனால் அவனோ இதோ இன்னும் சிறிது நேரத்தில் நான் பிரிந்து போய் விடுவேன் ' என்ற முகக் குறிப்புடனும் காரிய அவசரத்துடனும் அவள் முன் நின்றுக் கொண்டிருக்கிறான் . அவன் பிரியப் போகிறான் என்பதை உணர்ந்ததும் அவள் தன் முகத்தில் மனத்தின் துயரம் தெரிய வாடி நிற்கிறாள் . அந்த வாட்டத்தைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டே அவளிடம் சொல்கிறான் . " எதற்காக இப்படி மனம் கலங்குகிறாய் பெண்ணே ? உன்னைப் பெற்றவள் யாரோ ? என்னைப் பெற்றவள் யாரோ ? அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்திருக்கக்கூட மாட்டார்கள் , என் தந்தையும் உன் தந்தையும் எந்தவிதத் திலேனும் நண்பர்களுமில்லை . நீயும் நானும் இன்று இப்போது இங்கே சந்தித்துக் கொண்ட விநாடிக்கு முன்பாக என்றும் எப்போதும் எங்கும் நம்முள் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிந்து கொண்டதுமில்லை . இருந்தும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த நிலத்தோடு கலந்து அதன் வண்ணமாகி விடுவது போல் நம்முடைய அன்பு நெஞ்சங்கள் இன்று இப்படிச் சந்தித்த கணத்திலேயே ஒன்று கலந்து விட்டனவே ! இது எவ்வளவு பெரிய அதிசயம் ? "

Comments
Post a Comment