நாளும் ஒரு புத்தகம்
பாம்பன் கிளை நூலகம். மின் அணுவியல் 1886 - இல் ஹெர்ட்ஸ் மின் காந்த அலைகளை உற்பத்தி செய்தார் . அவர் மாக்ஸ்வெல்லின் மின் காந்தவியல் கொள்கை யின் அடிப்படையில் அவற்றைக் கண்டறிந்திருந்தார் . ஹெர்ட்ஸை பின் தொடர்ந்து இங்கிலாந்தின் ஆலீவர் லாட்ஜ் , ரஷ்யாவின் போபோவ் மற்றும் இந்தியாவின் ஜகதீஷ் சந்திர போஸ் ஆகியோர் உட்பட பலர் மின் காந்த அலைகளை பல்வேறு திசைகளில் ஆராய முயன்றனர் . எனினும் வெகுஜன பயன்பாடு எதற்கும் அதை உட்படுத்தும் முயற்சிகள் தோல்வி யையே தழுவின . ஒரு முறை வானில் ஏவப்பட்ட மின்காந்த அலைகளைத் திரும்பப்பெற முடியாதென்றே இயற்பியல் வல்லுனர்கள் கருதினர் . எனவே முயற்சிகளைக் கைவிடவும் எண்ணினர் . அட்லாண்டிக் பெருங்கடல் வழியே மின்காந்த அலை களை வானில் செலுத்தி அவற்றை வேறொரு இடத்திலிருந்து சற்றும் பிழையின்றி தெளிவாகத் திரும்பப் பெற்று உலகை அசத்தியவர் மார்கோனி . 1905 வாக்கில் ஒரு முழுமையான வானொலியை வடிவமைப்பதில் மார் கோனி பெற்ற வெற்றி இன்றும் தொடர் கிறது . மார்கோனி ஒரு முழு நேர இயற் பியலாளர் அல்லர் . தன் உதவியாளர்
18 ஐன்ஸ்டீன் முதல் ஹாக்கிங் வரை . . . ஜார்ஜ் கெம்ப்புடன் சேர்ந்து புதிய கண்டுபிடிப்புகளுக்கு முயன்று வந்த வணிக நோக்கு விஞ்ஞானி . அப்போதும் கூட வானிலுள்ள ஏதோ ஓர் எதிரொளிப்பின் ( கண்ணாடி போல ) மூலம் மின்காந்த அலைகள் திரும்ப அனுப்பப்படுவதாகவே இயற்பியலாளர்கள் நம்பினார்கள் . ஆப்பில்டன் எனும் விஞ்ஞானி தனது வானவெளி சோதனைகள் மூலம் இருபது களில் புவியைச் சுற்றிய வாயு மண்டலங்களில் அயனோஸ் ஃபியரைக் கண்டறிந்து அணுக்களை அயனிகளாக மாற்றி இந்த மண்டலம் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்வதை வெளியிட்ட தோடு போர்காலங்கள் வந்தபோது ரேடார் எனும் ஒரு கருவியையும் கண்டுபிடிக்க உதவினார் . மென்லோ பூங்காவின் சக்ரவர்த்தியான தாமஸ் ஆல்வா எடிசன் எலெக்ட்ரானிக் கருவிகளில் மிகவும் முக்கியமான வால்வுகளைத் தனது ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி முதன் முதலில் இயற்பியல் கண்டுபிடிப்புகளைப் பல்கலைக்கழகங் களிடமிருந்து வெளியே கொண்டு வந்தார் . எலெக்ட்ரான்கள் நேர்மின்வாய் நோக்கியே நகரும் என்ற ஜே . ஜே . தாம்சன் கோட்பாடுகளை வைத்து அவை உருவாக்கப்பட்டவை . டி . பாரஸ்ட் 1908 - ல் புதிய எலெக்ட் ரோடை சேர்த்து ட்ரையோடு வரை உருவாக்கி மின்காந்த அலைகளைக் கடத்துவதில் , வானொலி மற்றும் தொலைபேசிக்கும் வழிகோலினார் . முதல் உலக யுத்தத்தின் போது பயன் படுத்தப்பட்ட தொலைதூர வாக்கி டாக்கி போன்றவை வால்வுகளை அடிப்படை யாகக் கொண்டிருந்தன . இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இதுபோன்ற கண்டு பிடிப்புகளால் மின் அணுவியல் ( எலெக்ட்ரானிக்ஸ் ) எனும் புதிய அறிவியல் துறை பிறந்தது .

Comments
Post a Comment