நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

                                           
                   
    நீங்களும் நெம்பர் ஒன் ' ஆகலாம்                     3 . வித்தியாசமானவராய் இருங்கள் '          நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் ? ' என்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் . ' நான் பில்கேட்ஸ் மாதிரி ஆகணும் ' , ' ரஜினிகாந்தைப் போல் நடிகராகணும் ' , ' ஐஸ்வர்யா ராய் போல் பிரபல மாகணும் ' இப்படி பதில் வருமே தவிர ' நான் நானாக இருக்க விரும்புகிறேன் ' என்று பதிலளிப்பவர்கள் அரிது . வாழ்க்கையில் முன்னேற முன் மாதிரிகள் அவசியம் தான் . அவை உந்துதலை அளிப்பவை என்ற அளவோடு நின்றுவிட வேண்டும் . மேற்கொண்டு வெற்றிபெற சுய திறமைதான் உதவும் . இன்னொருவருடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது . நமக்கென்று சுய அடையாளம் இருக்க வேண்டும் . அதைப் பெறுவதற்கு நம்மிடம் உள்ள சிறப்பம்சம் ( பிரத்யேகத்திறமை ) தான் உதவக் கூடும் . பில்கேட்ஸ் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா . . . . இப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்தன்மையை உணர்ந்தவர்கள் . அதுவே அத்தகைய உயர்நிலையை அடையக் காரணமானது . உங்களிடம் உள்ள தனித்தன்மை ( individuality ) யை இனம் காணுங்கள் , வெளிப்படுத்துங்கள் . - வாழ்வில் முன்னேற விரும்புகிறவர்கள் இன்னொரு வரின் நிழலாகவோ , ஜெராக்ஸ் பிரதியாகவோ இருந்தால் ஒரு போதும் முன்னேற முடியாது . அவர்கள் சுயத்தை அறிய வேண்டும் , சுயமாக நிற்க வேண்டும் .

Comments

Popular posts from this blog

போட்டித் தேர்வு புத்தகங்கள் பாம்பன் கிளை நூலகம்

நாளும் ஒரு புத்தகம்