நாளும் ஒரு புத்தகம்

 பாம்பன் கிளை நூலகம்
நவீன வேளாண்மை

உயிர் வேலியாகவும் பயன்படும் ! நோய்த் தீர்க்கும் மூலிகையாகவும் பயன்படும் விவசாயிகளுக்கு கைமேல் பலன்கொடுக்கும் கல்யாண முருங்கை அழகுச் செடியாகவும் , காய்கறி செடிகள் , மலர் வகைகள் என பலவகைச் செடிகள் நிறைந்து கிடக்கின்றன , கடலூர் மாவட்டம் , சேத்தியாதோப்பு தென்றல் நர்சரியில் . இருந்தபோதும் நர்சரியின் உரிமையாளர் திரு . கொளஞ்சியப்பன் விவசாயிகளிடையே மரவளர்ப்பை அதிகம் ஊக்குவிப்பார் . அதோடு பொது இடங்களை மரங்களால் அழகாக்கி , சுற்றுப் புறத்தை சுகாதாரமாக வைப்போம் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் . இந்நிலையில் தற்போது விவசாய நிலங்களுக்கு இயற்கை வேலி அமைப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் . இதற்காக தனது நர்சரியில் கலாக்காய் ,அட்சய பாத்திரமாக விளங்குகிறது . கல்யாண முருங்கையின் இலை , பூ , தண்டு என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தவை . கல்யாண முருங்கை பொதுவாக வயிற்றுப் புழுக்களை கொல்லும் பண்புடையது . இதன் இலை சிறுநீரை பெருக்கும் . மலத்தை இளக்கும் . தாய்ப்பாலை பெருக்கி குழந்தைகளுக்கு ஆரோக்கியம் காக்கும் . இதன் பூக்கள் கருப்பையை சுத்தமாக்கும் . இதன் பட்டை கோழை அகற்றும் . காய்ச்சலை நீக்கும் . குடற்புழுக்களை கொல்லும் . 30 மி . லி கல்யாண முருங்கை இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10நாள் குடித்து வந்தால் பெண்களுக்கு மாத விடாயின்போது வரும் வயிற்றுவலி குணமாகும் . இந்த இலையில் இருந்து ரசம் தயாரித்தும் சாப்பிடலாம் . கல்யாண முருங்கையின் 10 சொட்டு இலைச்சாற்றை சிறிதளவு வெந்நீருடன் கலந்து குழந்தைகளுக்கு உள்ளுக்கு கொடுத்தால் குடற்புழு வெளியேறும் . பெரியோர்களுக்கு 4 ஸ்பூன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் வயிற்றுப் போக்கு சரியாகும் . தாய்மார்களுக்கு கல்யாண முருங்கை இலையை தேங்காய் எண்ணெய் சமைத்துக் கொடுத்தால் பால் சுரப்பு அதிகமாகும் .

Comments

Popular posts from this blog

போட்டித் தேர்வு புத்தகங்கள் பாம்பன் கிளை நூலகம்

நாளும் ஒரு புத்தகம்