நாளும் ஒரு புத்தகம்

         
 
பாம்பன் கிளை நூலகம்
தேசத்தின் சொத்து ஜீவா                திரைப்பட இயக்குநர் சீனிவாசன் மாணவராக இருந்த போது , கும்பகோணம் கல்லூரியில் அவர் ஏற்பாடு செய்த ஜீவா பேசிய கூட்டத்தில் , மாற்றுக் கட்சி மாணவர்கள் குழப்பம் ஏற்படுத்தினார் . களாம் . சீனிவாசனும் அவர்களுடைய சிநேகிதர்களும் இதற்குப் பழிக்குப் பழி வாங்கப் பேராசிரியர் அன்பழகன் கூட்டத்தில் திட்டமிட்டார்களாம் . அப்போது சீனிவாசனை ஜீவா அவர்கள் கூப்பிட்டுக் கூறிய அறிவுரை என்ன தெரியுமா ? " சீனிவாசா நீ சின்னப் பையன் . அரசியலில் அடிபட்ட வனும் அவமானப்பட்டவனும் பழிக்குப் பழிவாங்காமல் அமைதியாக இருந்து விடுவானேயானால் , அதுவே அவனைப் பிரபலப்படுத்திவிடும் . அடித்தவனுக்குத்தான் அவப்பெயர் ஏற்படும் . ஆத்திரப்படாமல் , பழிக்குப் பழி என்பதைக் கைவிடு , அதன் பலனை நீயே பார்ப்பாய் " என்றாராம் . ஜீவா நினைத்திருந்தால் , சீனிவாசனைப் போன்ற சிறுத்தை களைச் சுலபமாகச் சீண்டிவிட்டுக் கல்லூரியில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் . மோதல்களினால் உண்டாகும் காயங்களுக்கு ஆயிரம் நியாயங்களையும் கூறியிருக்க முடியும் . ஆனால் , முப்பது வயதிலேயே ஜீவா பழிக்கப் பழி வேண்டாம் என்ற முதிர்ச்சியைக் காட்டினார் . அதனால்தான் அவர் சொரிமுத்து அல்ல - ' ஞானமுத்து . புராண பாஷையில் சொன்னால் வேதவித்து , காரைக்குடிக்கு அருகே சிராவயல் கிராமத்தில் காந்தி ஆசிரமத்தை நடத்தி வந்தபோது ஜீவாவுக்கு என்ன வயது இருக்கும் தெரியுமா ? 20 வயதுதான் . இந்தக் காலத்தில் 20 வயது தமிழ்நாட்டு இளைஞனின் மனசுக்குள் இப்படியொரு அக்னிக் குஞ்சு இருக்க முடியுமா ? சிலருக்குள் வேண்டுமானால் இருக்கலாம் . ஆனால் , பெரும் பாலான விடலைகளிடம் அக்னிக் குஞ்சு மனசுக்குள் இருக்காது . உதடுகளில் புகையலாம் . வீரத்துறவி விவேகானந்தர் அச்சப்பட்ட அடிமை இந்தியாவை மாற்ற ஆசைப்பட்டவர் . ' வீர இளைஞர்கள் 20பேர் கிடைத்தால் போதும் ; இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் ' என்றாராம்.

Comments

Popular posts from this blog

போட்டித் தேர்வு புத்தகங்கள் பாம்பன் கிளை நூலகம்

நாளும் ஒரு புத்தகம்