நாளும் ஒரு புத்தகம்

                     பாம்பன் கிளை நூலகம்
இலை போயாச்சு ! சென்னை ஓட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட உட்கார்ந்தேன் . இலை ! போட்டார்கள் . தொட்டுப்பார்த்தேன் . வாழை இலை வடிவத்தில் கத்தரித்த பிளாஸ்டிக் வாழை இலை . நான் எழுந்துகொண்டேன் . " சார் , என்ன ஆச்சு ? என்றார் இலை போட்டவர் , " நிஜமான வாழை இலையில்தான் சாப்பிடுவது ! வழக்கம் ” சொல்லிக்கொண்டே வெளியேறினேன் . “ சாருக்கு நிஜமான வாழை இலை வேணுமாம் " என்ற கேலியும் மற்றவர்கள் சிரிப்பதும் கேட்டது . நாள்தோறும் வீடுகளில் வாழை இலையில் சாப்பிட்ட காலம் ஒன்று இருந்தது . தென்னை தெருவில் " வாழை இலை . வாழை இலை . . . . " என்று கூவி விற்பார்கள் . வாழை !இலை சாப்பாட்டுக்குத் தனிருசி உண்டு . சூடாகப்பரிமாறிய சாதத்தின் சுவையை | வாழை மர இலையின் வாசனை கூட்டிவிடும் . எளிய உணவைக் கூட வாழை ! இலையில் பரிமாறினால் . மனதில் மகிழ்ச்சி உண்டாகும் . தஞ்சாவூர் அருகில் உள்ள குக்கிராமத்தில் வசித்த நண்பரைப்பார்க்க இரண்டு மூன்று பேர் முன்னறிவிப்பு இல்லாமல் போய்விட் டோம் . ! மினுமினுக் மழை பெய்துகொண்டிருந்தது . அந்த வேளையிலும் நண்பரின் அம்மா சாப்பிடுங்கள் என கொல்லைப்புறத்துக்கு ஓடிப்போய் வாழை இலை கொய்துவந்து சாப்பாடு பரிமாறினார் . பச்சைப் பசேல் என்ற குருத்து நுனி இலைகள் அதில் ஆவி பறக்கும் வெள்ளை வெளேர் சாதம் . வற்றல் குழம்பு , கீரை மசியல் , சுட்ட அப்பளம் அவ்வளவுதான் . அந்தத் தாய் தன் அன்பை இலையாக்கி பரிமாறிய அனுபவம் பாயசத்தை இன்று வரை மறக்க முடியவில்லை . இலையைப் பார்த்த மாத்திரத்தில் இது பூவன் இலை , மொந்தன் இலை என்று ! என் பெரியப்பா சொல்லிவிடுவார் . அவருக்கு வாழை இலை கிடைக்காவிட்டால் , மந்தாரை இலை அதுவும் இல்லாவிட்டால் , தாமரை இலை . அப்போதெல்லாம் - நாங்கள் தஞ்சாவூரில் தாமரைக் குளங்கள் நிறைய . தாமரை இலைக்குப் பஞ்சமில்லை 26 | தி இந்து

Comments

Popular posts from this blog

போட்டித் தேர்வு புத்தகங்கள் பாம்பன் கிளை நூலகம்

நாளும் ஒரு புத்தகம்