நாளும் ஒரு புத்தகம்
பாம்பன் கிளை புத்தக விமர்சனம் நூலகம்இயற்கையை வெல்ல . . . ஒரு கிலோ அகத்திக் கீரையில் உள்ள சுண்ணாம்புச் சத்தைப் பெற , நூற்றிப் பதிமூன்று ஆப்பிள் பழம் தேவைப்படுகிறது . இதுதான் இயற்கை . செயற்கையின் மீதே விருப்பத்தைப் பதிக்கின்ற நவ நாகரீக இளைய சமூகம் , ஆப்பிள் போன்று அழகான தோற்றம் கொண்டிருந்தால் அரளி விதையைக் கூட அப்படியே சாப்பிட்டு விடுவார்கள் போலும் . - எங்குப் பார்ப்பினும் விரைவு உணவகம் , அரைவேக்காடு செய்து , எண்ணெய்ச் சட்டியில் வறுத்து , ருசிக்காக ஏதேதோ சக்கைகளைச் சாறுகளாகக் கலந்து ஆவிபறக்க வைத்தால் அதிலேதான் ருசி என்று நாக்கைத் தட்டிக் கொண்டு வயிற்றில் கொட்டிக் கொள்ளும் , அலங்காரம் மிகுந்த அலங்கோலங்கள் . அணிவகுப்பாக வரவேற்பு வளையங்களோடு தோரணங்கள் கட்டி , நோயைக் காசு கொடுத்து குடும்பத்தோடு வரவேற்கின்றனர் . " வயிறு நம் உயிரு ' என்பதை அறிந்து , ருசிக்காக சாப்பிடுவதைக் காட்டிலும் , பசிக்காகச் சாப்பிட்டு உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள் எதிலே என்பதை அறிந்து அவைகளை உணவாக உட்கொண்டால் வியாதியில் இருந்து விடுபட்டு வாழ் “ மருந்தே உணவு " , " உணவே மருந்து ' எனும் தாரக மந்திரத்தை மனப்பாடம் செய்து , தினப்பாடமாக உணவை உட்கொண்டு வந்தால் , நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும் . உடலோடும் , உணர்வோடும் , குடும்பத்தோடும் , ஊரோடும் , நாட்டோடும் , உலகோடும் , இன்பம் பெருக்கெடுக்கும் , எழில் கொஞ்சும் , வளம் கொஞ்சும் . இயற்கை வாரிக்கொடுக்கும் . இணையற்ற இன்பங்களை நாம் பெற்று வளமோடும் , நலமோடும் வாழ முடியும்


Very super
ReplyDelete