நாளும் ஒரு புத்தகம்
பாம்பன் கிளை நூலகம் 22 . பேரறிஞர் அண்ணா " கல்வி கற்பது அறிவை வளர்த்துக் கொள்வதேயன்றி . . . ஆடம்பர வாழ்க்கைக்காக அன்று ' என்று தெளிந்த மனம் இளமை முதலே அண்ணாவிட மிருந்து வந்தது . கல்வி கற்கும்போது பெரும்பாலான மாண வர்கள் ஆசிரியர்கள் கொடுக்கும் குறிப்புகளையோ அல்லது கட்டுரைகளையோ மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் பழக்கத்தினையே மேற்கொள் வார்கள் . . . . . . . ஆனால் அண்ணாவோ அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ராக விளங்கி . . . . தமது சொந்த நடையிலேயே தேர்வுகளை எழுதி முதல் தர மதிப்பெண்களைப் பெற்று வந்தார் . கல்வி கற்கும் காலத்திலே கல்லூரிப் படிப்பு சம்பந்தமானவற்றை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பல அறிஞர்களது வாழ்க்கை வரலாறு கள் - சாதனைகள் - மேல்நாட்டுக் கதை - கட்டுரை களையெல்லாம் படித்து படிக்கும் எல்லையினை விரிவுபடுத்தினார் . தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் சிறிய வாக்கியம ாகவோ - பெரிய வாக்கியமாகவோ ' பெரிய தொடராகவோ - எந்த முறையில் வேண்டுமானாலும் எழுதும் திறன் பெற்றார் . அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் நீண்ட தொடர்களை எழுதும் ஆற்றல் பெற்றவராக..விளங்கினார் . . . அதற்கு வடிகாலாக அமைந்தது நூல் நிலையங்களே . . . . . நூல் நிலையங்களில் நாட்டம் பொது அறிவு சம்பந்தமான நூல்கள் . எங்கிருந் தாலும் அங்கே சென்று மணிக்கணக்கில் படிப்பார் . சென்னையில் கன்னிமாரா உள்பட பல நூல் நிலையங்களுக்குச் சென்று படித்து வந்தார் . ஒருமுறை ஒரு நூலினைப் படித்தால் . . . அந் நூலில் உள்ளவைகளை அப்படியே ' கம்யூட்டரில் ஃபீட் ' செய்வது போல மூளையில் பதிவாக்கிக் கொள்வார் . அறிவு தாகங்கொண்டு பல்வேறிடங்களில் அலைந்து வந்தார் . தங்க சாலைத் தெருவில் ' பண்டிட் ஆனந்தம் ' என்பவர் நடத்தி வந்த நூல் நிலையமும் அவரது அறிவுத் தாகத்திற்கு ' தண்ணீர்ப் பந்தல் ' போன்று அமைந்தது என்றும் சொல்லலாம் . இவ்விதமாக அறிவினை விருத்தி செய்ததி னால் கட்டுரைகள் எழுதுவதில் நன்கு தேர்ச்சி பெற்றார் .

Comments
Post a Comment